சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

நடமாட்டக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை மொரட்டுமுல்ல காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.

கைதானவர்களில் 3 பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.