நிரவ்மோடிக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியது அமுலாக்கத்துறை!
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான சுமார் 329.66 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தனி நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய அமுலாக்கத்துறை மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி மும்பையில் வொர்லி பகுதியில் உள்ள ‘சமுத்ர மஹால்’ எனும் குடியிருப்பு, அலிபாக் பகுதியில் உள்ள நிலம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள காற்றாலை நிறுவனம், லண்டனில் உள்ள ஒரு குடியிருப்பு, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பங்குகள், வங்கி டிபாசிட்டுகள் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.
குஜராத்தை சேர்ந்த பிரபல வைரவியாபாரியான நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று தலைமறைவாகியிருந்தார். இதனையடுத்து இவர் மீது அமுலாகத்துறை வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.