எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது

எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் இடைநிறுத்தப்படமாட்டாது

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் கொவிட் 19 தொற்றின் காரணமாக அல்லது வேறு காரணங்களினால் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப் பணிகளுக்கான கல் மணல் மண் என்பனவற்றை விநியோகிக்கும் நிறுவனங்கள் சிலவற்றுக்கு அவற்றை தொடச்சியாக விநியோகிக்க முடியாதிருப்பது குறித்து அமைச்சில் அதிகாரிகளுடன் நடைபெற்ற ​பேச்சுவார்த்ததையின் போதே அமைச்சர் இந்த வியடத்தை குறிப்பிடார்.

விசேடமாக மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணப் பணிகள் உட்பட அரசாங்கம் முன்னெடுக்கும் பதின்மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான கல் மணல் மண் என்பனவற்றை வழங்கும் பொறுப்பு புவி ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.