இனி கன்சோலுக்கு அவசியம் இல்லை - அசத்தல் திட்டம் போடும் மைக்ரோசாப்ட்

இனி கன்சோலுக்கு அவசியம் இல்லை - அசத்தல் திட்டம் போடும் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக கேம் ஸ்டிரீமிங் சாதனங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சேவையை ஸ்மார்ட் டிவிக்களுக்கும் அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. எக்ஸ்பாக்ஸ் மற்றும் கேமிங் சேவை குறித்த விவரங்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டு உள்ளது. 

 எக்ஸ்பாக்ஸ்

எக்ஸ்பாக்ஸ் அனுபவத்தை ஸ்மார்ட் டிவிக்களில் வழங்க மைக்ரோசாப்ட் உலகின் முன்னணி தொலைகாட்சி உற்பத்தியாளர்களுடன் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் கேமிங் கன்சோல் இன்றி, வெறும் கண்ட்ரோலர்களை மட்டுமே வாங்கினால் டிவிக்களிலேயே கேமிங் செய்யலாம்.

தொலைகாட்சி அல்லது மானிட்டர் மூலம் அதிக கேமிங் பயனர்களை ஈர்க்க கிளவுட் கேமிங் சேவையை வழங்கும் ஸ்டிரீமிங் சாதனங்களை சொந்தமாக உருவாக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.