தெல்கொட வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

தெல்கொட வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

 

தெல்கொட மீகாஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உந்துருளியும் மகிழுந்தும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (10) இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் உந்துருளியில் பயணித்த 30 வயதுடைய ஆணும், 42 வயது மதிக்கத்தக்க பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் மொரகல மற்றும் தம்புள்ள ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து மகிழுந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.