தென்கொரியாவினால் 5 இலட்சம் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்க தீர்மானம்

தென்கொரியாவினால் 5 இலட்சம் டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்க தீர்மானம்

கொவிட்-19 தொற்றை ஒழிப்பதற்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு தென்கொரியா தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கான தென்கொரிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவற்றில் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அடங்கியுள்ளதாக தென்கொரிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 ஒழிப்பிற்கான நடவடிக்கைகளின் போது இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் தென்கொரியாவினால் இலங்கைக்கு 3 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.