நேற்றைய தினம் 60,000க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்ட சைனோபாம் தடுப்பூசி

நேற்றைய தினம் 60,000க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்ட சைனோபாம் தடுப்பூசி

நாட்டில் 66,060 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதல் மாத்திரை நேற்று (09) செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் 6,828 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை 396 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இதுவரை மொத்தமாக 925,242 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மாத்திரை செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 354,651 பேருக்கு அதே தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல இதுவரை மொத்தமாக 1,099,092 பேருக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதல் மாத்திரை செலுத்தப்பட்டுள்ளது. 6,994 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் மாத்திரை 62,703 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.