நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்

வெலிக்கடை சிறைச்சாலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ள பரிசோதனை அறிக்கைளுக்கு அமைய, 210 பேருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுறுதியான குறித்த கைதி தங்கியிருந்த கட்டடத்தில் இருந்த கைதிகளிடமும், சிறைச்சாலைகள் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் நான்கு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

ஒருவர் எத்தியோப்பியாவில் இருந்தும், மற்றுமொருவர் சவுதி ஆரேபியாவில் இருந்தும் நாடுதிரும்பிய நிலையில் தனிமைபப்டுத்தப்பட்டவர்கள் என்பதுடன், ஒருவர் இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படை சிப்பாய் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

மற்றுமொருவர் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 81 ஆக அதிகரித்துள்ளது.

ஆயிரத்த 955 பேர் குணமடைந்துள்ள நிலையில், 115 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.