உரும்பிராயில் இரண்டு இளைஞர்கள் கைது

உரும்பிராயில் இரண்டு இளைஞர்கள் கைது

உரும்பிராய் பகுதியில் இளைஞர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உரும்பிராய் பகுதியில் பொலிசார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான இளைஞர் ஒருவரை சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது அவரிடமிருந்து 4 கிராம் கஞ்சா போதைப் பொருளை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உரும்பிராய் செல்வபுரம் பகுதியில் வைத்து “சாதா”என்ற போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பிறிதொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.