பள்ளிக் காதல் பலியாகிய இரு உயிர்கள்: சோகத்தில் மூழ்கிய குடும்பம்
கட்டுகஸ்தோட்ட, பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இரு பாடசாலை காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இன்று காலை 5.45 மணியளவில் இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இருவரையும் நேற்றில் இருந்து காணவில்லை என அவர்களுடைய பெற்றோர் இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் நவயாலதென்ன புகையிரத பாலத்திற்கு அருகில் சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இருவரின் சடங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கண்டி, நவயாலதென்ன பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான ஷாமிலி ஹர்ஷனி ரத்நாயக்க என்ற மாணவியும் 16 வயதான பல்லேதலவின்ன பிரதேசத்தை சேர்ந்த அகில விஜேரத்ன என்ற மாணவனுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் 10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களில் கல்வி கற்று வருவதுடன் காதல் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சடலங்களைப் பார்வையிட்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தான் என அடையபளம் காட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.