கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 174 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை
வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்ட கைதியுடன் பழகிய 174 பேருக்கு பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன
அத்தோடு கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 450 பேருக்கும் பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெலிக்கடை சிறைச்சாலையில் மறு அறிவித்தல் வரும்வரையில் சிறை கைதிகளை பார்வையிட செல்வோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.