கலைத்துக் கலைத்து சரமாரி தாக்குதல்: 43 பேருக்கு ஏற்பட்ட கதி!
மலையகத்தின் பல பகுதிகளில் குளவித் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் 45 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை ஊட்டுவள்ள பிளேமோர் பிரிவில் தேயிலை மலை இல 8 மலை இல 3 ஆகியவற்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீது குளவிகள் கலைந்து சரிமாரியாக தாக்கியுள்ளன.
இந்த குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பாதிப்புக்குள்ளான 30 பெண் தொழிலாளர்களும் 5 ஆண் தொழிலாளர்களுமே அக்கரபத்தனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் எபோலிஸ்லி மொண்டிபெயார் தோட்டத்தில் இல 3 தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 10 பேர் இன்று மதியம் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் எட்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி பலர் பல பிரதேசங்களில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து தோட்ட நிர்வாகங்களோ தங்களது தொழிற்சங்கங்களோ எவ்வித நடவடிக்கை எடுப்பதில்லை என இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்து உரியவர்கள் கவனத்தில் கொண்டு தங்களுக்கு சரியான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.