இலங்கை கடல் எல்லைகளில் தீவிர பாதுகாப்பு!
வெளிநாடுகளில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டிற்குள் வரும் நபர்களை கைது செய்தல் மற்றும் கடல் எல்லைகளை பாதுகாத்தல் தொடர்பிலான விஷேட வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கடல் மார்க்கமாக வடக்கு பிரதேசங்களுக்கு வரும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் இந்த நிலமையை கட்டுப்படுத்த கடற்படையினர் விஷேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததுடன் அதனை தொடர்ந்தும் அதிகரிப்பதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.