தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு

தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு

கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவர்கள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, நவயாலதென்ன பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவனும் 16 வயதுடைய யுவதி ஒருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுகஸ்தொட்ட – பெல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இன்று காலை 5.45 மணியளவில் இவர்கள் இருவரும் நவயாலதென்ன ரயில் பாலத்தில் இருந்து மகாவெலி ஆற்றில் குதித்துள்ளனர்.

குறித்த இருவரும் 10 மற்றும் 11ஆம் வகுப்புக்களில் கல்வி கற்று வருவதுடன் காதல் விவகாரம் தொடர்பாக இந்த தற்கொலை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரையும் நேற்றில் இருந்து காணவில்லை என அவர்களுடைய பெற்றோர் இன்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் நவயாலதென்ன ரயில் பாலத்திற்கு அருகில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பெற்றோர் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர் வருவதை அவதானித்த குறித்த இருவரும் மகாவெலி ஆற்றில் குதித்தாக உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.