கொவிட் தொற்றுறுதியான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆண் செவிலியர்

கொவிட் தொற்றுறுதியான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆண் செவிலியர்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையொன்றில் கொரோனா தொற்றுறுதியாகி சிகிச்சை பெற்று வந்த பெண் ஓருவரை, ஆண் செவிலியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயதான பெண் ஒருரை, குறித்த செவிலியர் பாலியல் துஷ்பிரயோகம்  செய்துள்ளதாகவும், பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் இந்த சம்பவம் இடம்பெற்ற 24 மணி நேரத்திற்குள் அவர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்தப் பெண் இறப்பதற்கு முன், தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பில் வைத்தியர் ஒருவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செவிலியர், இதற்கு முன் தன்னுடன் பணியாற்றிய செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்தமை, பணியில் இருக்கும்போது மது அருந்தியமை போன்ற குற்றங்களுக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன