மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் சம்பிக்க போட்டுடைத்த தகவல்: ஆணைக்குழுவின் முன் பகீர்

மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் சம்பிக்க போட்டுடைத்த தகவல்: ஆணைக்குழுவின் முன் பகீர்

அடிப்படைவாதிகளுக்கு தமது அரசாங்கத்தில் புலனாய்வு பிரிவினர் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டது என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பிலும் உரிய விசாரணைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாதிகளுடன் அரசியல் தரப்பினரும், வியாபாரிகளும் அரசியலுக்கு அப்பால் சென்று தொடர்பு வைத்துள்ளானர்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் 2019 செப்டம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழுவில் நேற்று சாட்சியமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முஸ்லிம் அடிப்படைடைவாதம் தீவிரவாதத்தை நோக்கி செயற்படுகிறது என்ற தகவல் மிக தெளிவாக முற்பட்ட காலங்களில் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைத்துள்ளது. அதே போன்று கடந்த வருடம் ஐந்தாம் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேராதெனிய ரஜோபவனராம விகாரைக்கு சென்றிருந்த வேளை கெப்படியாகொட சிறி விமல தேரருடன் ஆற்றிய உரை தொடர்பிலும் அங்கு அவர் ஏற்றுக் கொண்டார்.

இந்த அடிப்படைவாதிகளுக்கு அரசாங்கம் புலனாய்வு பிரிவினர் ஊடாக சம்பளம் வழங்கி இரகசிய தகவல்களை பெற்றுக் கொண்டதா?

அவ்வாறாயின் அந்த அடிப்படைவாதி தரப்பினர் யார், எந்த நபர்களிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொண்டார்கள், இவர்களிடமிருந்து தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லையா, அவ்வாறு இல்லாவிடின் அவர்கள் குண்டுத்தாக்குதலுக்கு சம்பந்தமில்லையா, உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விசேட விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் ராஜபக்ஷர்களின் காலத்தில் அவன்காட் நிறுவனம் வெளிநாட்டு கடல் பாதுகாப்பு தரப்பினருக்கு ஆயுத பயிற்சி இலங்கையில் வழங்கப்பட்டதாகவும் எமக்கு தகவல் கிடைத்தன. இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அடிப்படைவாத தீவிரவாதிகளுடன் அரசியல் தரப்பினரும், வியாபார தரப்பினரும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் சென்று தொடர்பு கொண்டுள்ளார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள வேண்டும். அனைத்து உண்மைகளையும் ஆணைக்குழு பகிரங்கப்படுத்த வேண்டும்.

ஹல் - ஜிஹாட் - ஹல் கய்தா என்ற எனது படைப்பாக்கம் 2003ம் ஆண்டு வெளியானது. அதில் ஒலுவில் பிரதேசத்தில் ஒரு தடவை இடம் பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு சில முஸ்லிம்கள் தென்கிழக்கு வலயத்தை தனி இராச்சியமாக மாற்றியமைப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பது குறித்தும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் கிடையாது. ஆனால் இவ்விவகாரம் தொடர்பில் ராஜபக்ஷர்களின் காலத்தில் இருந்து குறிப்பிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.