சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எனினும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கோள் மண்டல பணிப்பாளர் கே.அருணு பிரபா பெரேரா தெரிவித்துள்ளார்.
கோள் மண்டல வளாகத்தில் சமூக தொலைவு பராமரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் திகதி கோள் மண்டலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.