நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகளை அள்ளித்தரும் நிலக்கடலை எண்ணெய் !!

நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகளை அள்ளித்தரும் நிலக்கடலை எண்ணெய் !!

போலிக் அமிலம் கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கடலை எண்ணெய்யில் போலிக் அமிலம் நிறைந்துள்ளதால், தினமும் தவறாது  கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

கடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இதனால் மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவது  தவிர்க்கபடுகிறது. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள்  தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.

 

இரத்த அழுத்தம் கடலை எண்ணெய்யில் மோனோசாச்சுரேட்டட் பேட் எனப்படும் நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது. இந்த கொழுப்பு உடலில் ஓடும் ரத்தத்தின்  சீரான ஓட்டத்தை காக்கிறது.

 

நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின்  வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு. இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.

 

கடலை எண்ணெய்யை கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த  எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் இ சத்து இருதயத்தை சிறப்பாக செயல்பட செய்கிறது.

 

கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கான பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகம் உள்ளது. உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்களில் வளரக்கூடிய புற்று நோயை எதிர்த்து கடலை எண்ணெய் சிறப்பாக செயல்புரிவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்று  நோய் ஏற்படுவதை தடுப்பதிலும் சிறப்பாக செயல்புரிகிறது கடலை எண்ணெய்.