வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காத்திருக்கும் கனமழை ; விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை | Rain Expected For Northern And Eastern Province

ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.