தமிழர் பகுதியொன்றில் திருமணமாகாத யுவதியை கர்ப்பமாக்கிய சட்டத்தரணி ; நீதிமன்றம் அதிரடி

தமிழர் பகுதியொன்றில் திருமணமாகாத யுவதியை கர்ப்பமாக்கிய சட்டத்தரணி ; நீதிமன்றம் அதிரடி

காத்தான்குடியில் யுவதி ஒருவரை பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்படடுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தமிழர் பகுதியொன்றில் திருமணமாகாத யுவதியை கர்ப்பமாக்கிய சட்டத்தரணி ; நீதிமன்றம் அதிரடி | Lawyer Sexually Abused Young Woman

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை (30) உத்தரவிட்டார்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றைச் சேர்ந்தவரான சட்டத்தரணி ஒருவர் தனது பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் 24 வயதுடைய யுவதி ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

  குறித்த யுவதி தனிமையில் இருக்கும் போது சட்டத்தரணி அவர் மீது அடிக்கடி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ள தனிமையில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுவதிக்கு மதிய உணவில் மயக்க மருந்தை கொடுத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட யுவதிக்கு குறித்த சட்டத்தரணி நபர் ஒருவரை திருமணம் செள்து வைத்துள்ளார். ஒரு வாரத்தின் பின்னர் குறித்த யுவதி மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து திருமணத்துக்கு முன்னர் கர்ப்மாகியுள்ளதை அறிந்த யுவதியை திருமணம் முடித்த கணவன் யுவதியுடன் முரன்பட்டுக் கொண்டு அவரை விட்டுவிட்டு வெளியேறிய நிலையில் யுவதி மீது பாலியல் பலாத்காரம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சட்டத்தரணியை நேற்று (30) பொலிசார் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதவான் அவரை எதிர்வரும் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.