மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான நாற்பது ஏக்கர் கொண்ட காணியை, நேற்று முன்தினம் கனரக இயந்திரத்தைக் கொண்டு சுத்தப்படுத்தியபோது, மனித எச்சங்கள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டிருற்தமை குறிப்பிடத்தக்கது.