காவற்துறை விடுத்துள்ள கோரிக்கை
காவற்துறை போதை பொருள் தடுப்பு பிரிவில் போதை பொருள் வியாபாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைக்கு அவசியமான நபர் ஒருவர் குறித்து பொது மக்களின் ஒத்துழைப்பினை காவற்துறை நாடியுள்ளது.
சமன் வசந்த குமார எனப்படும் சந்தேக நபரான காவற்துறை பரிசோதகர் இலக்கம் 189, கிரிகத்த, வெலிவேரிய எனும் முகவரியினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 071-8591767 மற்றும் 011-2422176 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு காவற்துறை தெரிவித்துள்ளது.