யாழில் வாகனம் பழுதுபார்த்து கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் வாகனம் பழுதுபார்த்து கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

யாழ்.நீர்வேலி பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் இடத்தில் வாகனமொன்றின் சுமை பெட்டி விழுந்ததில் இளைஞரொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கனரக வாகனங்கள் திருத்தும் இடத்தில் டிப்பர் வாகனமொன்றின் சுமை பெட்டியை ஜக் மூலம் துாக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது ஜக் நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது.

இதன்போது குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.