
இந்தியாவில் 15 நாட்களில் 50 இலட்சம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் 15 நாட்கள் என்ற மிகக்குறுகிய காலப்பகுதியில், 50 இலட்சம் பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை, நேற்றைய தினம் இரண்டு கோடியைக் கடந்துள்ளது.
முதல் 50 இலட்சம் தொற்றாளர்கள் 229 நாட்களில் பதிவாகியுள்ளனர்.
50 இலட்சம் முதல் ஒரு கோடி கொவிட்-19 தொற்றாளர்கள், 94 நாட்களில் பதிவாகியுள்ளனர்.
ஒரு கோடி முதல் ஒன்றரைக் கோடி தொற்றாளர்கள் 121 நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஒன்றரை முதல் இரண்டு கோடி தொற்றாளர்கள், 15 நாட்களில் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.