மஹாராஷ்ட்ரா வைத்தியசாலையில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு! (படங்கள்))

மஹாராஷ்ட்ரா வைத்தியசாலையில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு! (படங்கள்))

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அங்குள்ள நோயாளிகளை வேறு வைத்தியசாலைக்கு மாற்றும்போது அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் தானே (Thane) மாவட்டத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று அதிகாலை 03.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் பணிகளுக்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த 23 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

அவ்வாறே, அம்மாநிலத்தின் நாசிக் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில்  பிராணவாயு விநியோகம் தடைப்பட்டதால் 23 கொவிட் நோயாளிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.