
இந்தியாவில் கொவிட் மரணங்கள் 200,000 ஐ கடந்தது
கொவிட்-19 தொற்றினால் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ள இந்தியாவில், கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 200,000 ஐ கடந்துள்ளது.
நேற்றைய நாளில், 3,300 இற்கும் அதிகமான கொவிட்-19 மரணங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
கொவிட்-19 பரவல் ஆரம்பித்த நாள் முதல், இந்தியாவில் நாளொன்றில் பதிவான அதிக கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கையாகவும் இது பதிவாகியுள்ளது.
இதையடுத்து, இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை, 201,186 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதேநேரம், சர்வதேச ரீதியில் 200,000 கொவிட்-19 மரணங்களைக் கடந்த நான்காவது நாடாகவும் இந்தியா பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் 587,000 மரணங்களும், பிரேஸிலில் 395,000 மரணங்களும், மெக்ஸிகோவில் 215,000 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன