அருகில் இருப்பவர் கொரோனா தொற்றாளரா என்பதை அடையாளம் காட்டும் புதிய கருவி
கொரோனா தொற்றுக்குள்ளான நபர் அருகில் இருந்தால் அவர்களை அடையாளம் காணும் வகையிலான புதிய கருவியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமக்கு அருகில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இருந்தால் இக்கருவி உடனடியாக சத்தம் எழுப்பும் எனவும் இதனைத் தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் உள்ள மின்கலமானது (பேட்டரி) 9 மாதங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம் என இதை தயாரித்த விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
கைப்பேசிகள் இல்லாத மற்றும் கொரோனா ஏற்படும் ஆபத்து உள்ளவர்களுக்கு முதன்முதலில் இந்த உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், கொரோனா நோயாளிகளைக் கண்டறிவதற்கான புதிய தொலைபேசி மென்பொருளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பிரிவில் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல் தொலைபேசியில் மென்பொருள் சேர்க்கப்பட்டதும், அருகிலுள்ள நபர் ஒரு கொரோனா தொற்றாளரா, தனிமைப்படுத்தப்பட்ட நபரா அல்லது வெளிநாட்டிலிருந்து வந்தவரா என்பதை அறிந்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.