2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இலங்கை ரூபாயின் பெறுமதி 5.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி  (CBSL) உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று (31) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 306.29 ரூபாவாகவும், விற்பனை விலை 313.83 ரூபாயாகவும் காணப்பட்டது.

2024 டிசம்பர் 31 ஆம் திகதியன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 288.32 ரூபாவாகவும், விற்பனை விலை 297.01 ரூபாயாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி | Sl Rs Depreciates By 5 6 Against Us Dollar In 2025

இதேவேளை  கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்பட்ட பணவீக்க விகிதம், 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்திலும் 2.1% ஆக மாற்றமின்றி நிலவுகிறது.

2025 டிசம்பர் மாதத்திற்கான அனைத்துப் பொருட்களுக்குமான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் 195.8 ஆக பதிவாகியுள்ளது. இது 2025 நவம்பர் மாதத்தின் 193.4 சுட்டெண்ணுடன் ஒப்பிடுகையில் 2.4 புள்ளிகள் அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.