வைத்தியசாலைக்கு செல்லுங்கள் -பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

வைத்தியசாலைக்கு செல்லுங்கள் -பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல், நெஞ்சுவலி , உடல்வலி, மூட்டுவலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள வைத்தியசாலைக்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின்படி 25 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போதுள்ள கொவிட் 19 தொற்றுப் பரவல் சூழலைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவசியமற்ற தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் ஒன்றுகூட வேண்டாம் என்றும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . பொது மக்கள் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அதிகாரிகளுக்கு உதவி தமது சமுக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்