தனிமைப்படுத்தலுக்கு முன்னதாகவே கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்! (காணொளி)

தனிமைப்படுத்தலுக்கு முன்னதாகவே கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்! (காணொளி)

திருகோணமலை மாவட்டத்தின் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே அப்பகுதியைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பூம்புகார் கிராம சேவகர் பிரிவு நேற்று(26) இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக, நேற்று பிற்பகல் இராணுவப் பேச்சாளரால் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பையடுத்து, அங்குள்ள பெரும்பாலானோர் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை எமது செய்தியாளர் குறித்த பகுதியில் இருந்துள்ளார். அக்காலப்பகுதியில் பாதுகாப்புப் பிரிவினர்கள் எவரும் குறித்த பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் எவரேனும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தால் இந்த நிலைமையை தவிர்த்துக்கொள்ள முடியுமானதாக இருந்திருக்கும என அவர் மேலும் தெரிவித்தார்