தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 108 பேர் கைது
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கமைய, நேற்று (26) தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரை 3,755 பேர் இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கைதானவர்களில் அதிகமானவர்கள் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
3,650 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்