மாணவர்களை அச்சுறுத்தி பணம்பறித்த இருவர் விளக்கமறியலில்! (காணொளி)

மாணவர்களை அச்சுறுத்தி பணம்பறித்த இருவர் விளக்கமறியலில்! (காணொளி)

பிரத்தியேக வகுப்புகளுக்கு வருகைதரும் மாணவர்களை அச்சுறுத்தி பணத்தை அபகரித்த இருவர் பதுளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் இருவரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கமைய, இந்த சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பபட்ட சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு அடிமையான 21 மற்றும் 22 வயதானவர்களாவர்.

பிரத்தியேக வகுப்பு மாணவர்களிடம், இச்சந்தேகநபர்கள் நீண்டகாலமாக இவ்வாறு அச்சுறுத்தி பணம் பறித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (26) பதுளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் மே 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்