இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு 3 நாடுகள் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

இலங்கை செல்லும் தமது பிரஜைகளுக்கு 3 நாடுகள் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

இலங்கையில் கொவிட்-19 பரவல் அதிகரித்தமையை அடுத்து சில நாடுகள் தமது பிரஜைகளுக்கான விசேட பயண அறிவுறுத்தல்களை விடுத்துள்ளன.

இதற்கமைய பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களது பயண அறிவுறுத்தல்களை புதுப்பித்துள்ளன.

கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இலங்கை அபாய நிலையின் மூன்றாவது மட்டத்தில் உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

அத்துடன் விமானங்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் காணப்படுவதாகவும் பிரித்தானியா தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூர் கட்டுப்பாடுகளுக்கு அமைய செயற்படுமாறும் தமது பிரஜைகளை குறித்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

மேலும் அபாயம் மிகுந்த வலயங்களுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது