மேல் மாகாண பாடசாலைகள் மீண்டும் மூடப்படுமா? இன்று மாலை தீர்மானம் !

மேல் மாகாண பாடசாலைகள் மீண்டும் மூடப்படுமா? இன்று மாலை தீர்மானம் !

கொரோனா பரவல் காரணமாக மேல் மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கூட்டத்தின் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒஃப் த எயாபோர்ஸ் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின்போது, மேல் மாகாண பாடசாலைகளை தொடர்ந்தும் நடத்தி செல்வதா அல்லது விடுமுறை வழங்குவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்