வட்டவளையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 15 பேருக்கு கொரோனா

வட்டவளையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 15 பேருக்கு கொரோனா

வட்டவளை பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 15 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

வட்டவளை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இவ்வாறு தொற்றுறுதியானவர்களில் முன்னர் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் ரொசல்ல மற்றும் மாணிக்கவத்தை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் வட்டவளை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.காமதேவன் தெரிவித்தார்.