
சூது விளையாடிய 22 பேருக்கு தொற்றியது கொடிய கொரோனா
வலல்லாவிட, பெலவத்த, முதலாம் கட்டை பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு பணத்திற்காக சூது விளையாடிய 22 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மீகஹதென்ன பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
இந்த மாதம் 23 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் சோதனைகளில் இந்த நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சூதாட்ட விளையாட்டில் பங்கேற்ற பலரை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார ஆய்வாளர் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 22 பேரும் பெலவத்த, பஹல ஹெவெஸ்ஸ, மீகஹதென்ன, வலல்லாவிட லேதெல மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்களாவர்.