பொதுமக்களின் தகவலையடுத்து யாழில் கண்டுபிடிக்கப்பட்ட அபாயகரப் பொருள்!

பொதுமக்களின் தகவலையடுத்து யாழில் கண்டுபிடிக்கப்பட்ட அபாயகரப் பொருள்!

மருதனார்மடம் - கைதடி வீதியில் பழைய வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு அண்மையாக நேற்று மாலை இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார் வெடிகுண்டு இருந்த இடத்தை அடையாளப்படுத்தியதோடு

அதனை மீட்டு செயலிழக்க வைப்பதற்கான அனுமதி மல்லாகம் நீதிமன்றில் இன்று பெறப்படும் என்றும் அதன் பின்னரே வெடிகுண்டு அந்தப் பகுதியிலிருந்து அகற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.