ஒட்சிசன் விநியோகம் தடைப்பட்டதால் 22 கொரோனா தொற்றாளர்கள் பலி! (காணொளி)

ஒட்சிசன் விநியோகம் தடைப்பட்டதால் 22 கொரோனா தொற்றாளர்கள் பலி! (காணொளி)

இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள அரச மருத்துவமனை ஒன்றின் பிரதான வாயு தாங்கியில் இன்று(21) ஏற்பட்ட கசிவால் 22 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றிலுள்ள பிரதான தாங்கியிலிருந்து வாயு உருளைகளுக்கு (சிலிண்டர்) ஒட்சிசன் விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்தன.

அதன்போது, எதிர்பாராத விதமாக வாயு தாங்கியில் பாரிய கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுமார் 30 நிமிடங்களுக்கு ஒட்சிசன் விநியோகம் தடைப்பட்டதால், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொவிட் நோயாளிகள் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு ஒட்சிசன் இல்லை. இதனால் ஒட்சிசன் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு மருத்துவமனைகளில் உள்ள தாங்கிகளில் ஒட்சிசன் நிரப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.