பிரிட்டனுக்கான விமானங்களை ரத்து செய்தது ஏர் இந்தியா

விமான சேவை தொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்குதல் தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று ஏர் இந்தியா கூறி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காத அளவிற்கு பரவி வருவதால், இந்தியாவுக்கான விமான சேவையை பிரிட்டன் அரசு நிறுத்தியது. விமான போக்குவரத்து தடைக்கான சிவப்பு பட்டியலில் இந்தியாவை சேர்த்தது. 

 

இதனையடுத்து, பிரிட்டனுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. 

 

 

ஹீத்ரோ விமான நிலையத்தில் அமர்ந்திருக்கும் பயணிகள்

 

வரும் 24ம்தேதி முதல் 30ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்.

 

விமான சேவை தொடர்பான புதிய அட்டவணை, பயணிகளுக்கு பணத்தை திரும்ப வழங்குதல் மற்றும் தள்ளுபடி தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறி உள்ளது.