
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1½ கோடியை கடந்துள்ள நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.30 லட்சமாக உயர்ந்து உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிய நிலையில், கடந்த 19 நாட்களில் மட்டும் 247 சதவீதம் உயர்ந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்தது. அதாவது மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 5.8 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 19 நாட்களில் மட்டும் 3½ மடங்கு உயர்ந்து நேற்று 20.30 லட்சமாக அதிகரித்து உள்ளது.
இதுவரை உலக அளவில் மொத்த பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 3 கோடியே 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தற்போது 68.50 லட்சம் பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்த பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிப்பு 1½ கோடியை கடந்துள்ள நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20.30 லட்சமாக உயர்ந்து உள்ளது.