பப்ஜி விளையாட ரூ. 16 லட்சம் செலவு செய்த சிறுவன்…

பப்ஜி விளையாட ரூ. 16 லட்சம் செலவு செய்த சிறுவன்…

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்ன் பப்ஜி கேம் விளையாட ரூ. 16 லட்சம் செலவு செய்துள்ள விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், தனது அப்பா, அம்மாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16 லட்சம் பணத்தை எடுத்து,  இணையதளத்தில் அனைவராலும் விளையாடப்படும் பப்ஜி கேம் விளையாட்டுகு செலவு செய்துள்ளான். அதாவது, தான் பப்ஜி கேமுக்கு அடிமையானதால், பப்ஜியில் தன்னோடு இணைந்து விளையாடியவர்களுக்கும் இந்த ஆப்பை அப்கிரேட் செய்ய நிறைய பணம் செலவழித்துள்ளான் சிறுவன். இதில் முக்கியமாக வங்கியின் இருந்து பணம் எடுத்ததும் அப்பாவுக்கு வரும் செல்போன் அலர்ட் பற்றிய மெசேஜ்ஜை டெலிட் செய்துள்ளான்.

இந்த விசயத்தை சிறுவனுடைய தந்தையே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.