பூநகரி பகுதியில் விபத்து: பல்கலைக்கழக மாணவர் பலி

பூநகரி பகுதியில் விபத்து: பல்கலைக்கழக மாணவர் பலி

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமங்கிராய் வில்லடி பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.