நடிகர் விவேக்கின் நினைவாக இலங்கையில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன!

நடிகர் விவேக்கின் நினைவாக இலங்கையில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன!

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் நினைவாக இலங்கையின் வடக்கு பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

வவுனியா - கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குழுவினரே இவ்வாறு மரக்கன்றுகளை நாட்டியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் 'விவேக்' நேற்று காலமானார்.

மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னை - வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் விவேக்.

இவருக்கான சிகிச்சைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்