ராய்ப்பூர் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் - ஐவர் பலி (காணொளி)

ராய்ப்பூர் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீப்பரவல் - ஐவர் பலி (காணொளி)

இந்தியாவின் ராய்ப்பூர் மாவட்டத்தின் திகரப்பரா பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில் திப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று (17) மாலை திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினரால் நோயாளர்கள் மீட்கப்பட்டதுடன், தீப்பரவலையும் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தனர்.

பின்னர் நோயாளிகள் சிகிச்சைகளுக்காக வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தீவிபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்