நீதிமன்ற எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம்
வல்வெட்டித்துறையில் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு நீதவானால் எச்சிரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
2018 ஆம் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாமையை அடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்று காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.