யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இன்றைய கொரோனா நிலைவரம் வெளியானது

யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் இன்றைய கொரோனா நிலைவரம் வெளியானது

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 404 பேரின் மாதிரிகள் இன்று (சனிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏழு பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குகினார்.

அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.