கொரோனாவில் இருந்து மீண்டார் சுந்தர்.சி

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் சுந்தர்.சி, கொரானாவில் இருந்து மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சி-யும் கொரோனாவால் சில தினங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டார்.

 

சுந்தர்.சி

 

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணம் அடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒருவாரம் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் குஷ்பு மற்றும் அவரது மகள்கள் சுந்தர்.சியை பார்க்க முடியும் என்று குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்