இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 200,739 பேருக்கு கொவிட்

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 200,739 பேருக்கு கொவிட்

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 200,739 பேருக்கு கொவிட் -19 தொற்றுறுதியாகியுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டில் நாள் ஒன்றில் அடையாளங்காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 140,70 000ஐக் கடந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் இந்தியாவில் 1037 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி அந்த நாட்டில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 173,152 ஆக அதிகரித்துள்ளது