மேல் மாகாணத்தில் களமிறக்கப்பட்டுள்ள 2,000 க்கும் மேற்பட்ட பொலிஸார்

மேல் மாகாணத்தில் களமிறக்கப்பட்டுள்ள 2,000 க்கும் மேற்பட்ட பொலிஸார்

பொது இடங்களில் முகக் கவசம் அணியாது செல்பவர்களை அடையாளங் காண்பதற்காக மேல் மாகாணத்தில் 2,000 க்கும் மேற்பட்ட பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதை தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியாதிருந்த 2,731 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு - ஜிந்துபிட்டியில் ஒருவருக்கு கொரோனா உறுதிப்டுத்தப்பட்டதை அடுத்து அங்கு தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முகக்கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.