இந்திய உயர்நீதிமன்ற ஊழியர்களில் 50 சதவீதமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

இந்திய உயர்நீதிமன்ற ஊழியர்களில் 50 சதவீதமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதி

இந்திய உயர்நீதிமன்றிலுள்ள ஊழியர்களில் 50 சதவீதமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்காரணமாக வழக்கு விசாரணைகள் தற்போது தொலை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெறுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நீதிமன்ற வளாகத்தில் தற்போது தொற்று நீக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்காரணமாக வழக்கு விசாரணைகளில் மேலும் தாமதம் ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது